என் இனிய நண்பர்களுக்கு
மீண்டும் எப்போது எம்
இனிமையான சந்திப்பு
எனும் ஏக்கத்தோடு
என்றாவது எம் விலாசம்
தொலைந்து போகும் போது
எங்கிருந்தாவது நான் அழுவேன்
என் கண்ணீரால் கரையும்
உங்கள் இதயங்கள்
நீங்கள் இல்லாத என்
மனம் மீண்டும் பசுமைகளை
தேடிப்போகும் இனிமையான
அந்த நாட்களை எண்ணி
வாழ்க்கையில் பெரிய
ஆச்சர்யம் அன்பு
நிறைந்தவர்களை எப்போதாவது
எங்காவது சந்திக்க நேரிடும்
அதுபோல்
நம் சந்திப்பும் நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை.
Wednesday, February 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment